Search This Blog

Sunday, 11 March 2012

சகோதரனிடத்தில் அன்பு


 
          
ஒரு மனிதன் கீழே விழுந்து கையிலுள்ள எலும்பு முறிந்து விட்டது என்று வைத்து கொள்வோம். அது ஒரு வியாதி அல்ல, எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அதை அப்படியே விட்டு விட முடியுமா? இல்லை, டாக்டரிடம் போய் எக்ஸ்ரே எடுத்து, கைட்டு போடுவோம். கட்டு போடுவதற்கு முன் கொஞ்சம் அசைந்தாலும் உயிரே போய் விடுவது போல பயங்கர வேதனை ஏற்படும். அதை சரிப்படுத்தினாலொழிய அந்த வேதனை நீங்குவதில்லை. அந்த அளவு நாம் நம் சரீரத்தை நேசிக்கிறவர்களாக இருக்கிறோம்.
ஆனால் நம் உடன் சகோதரனோடு உறவு உடைபடும்போது என்ன செய்கிறோம்? இதை குறித்து மற்ற சகோதரனிடம் கேட்டால், என்ன செய்வது, நான் நன்றாகத்தான் இருக்கிறேன், பிரச்சனை என் தம்பியிடம் தான் உள்ளது என்பார். தம்பியிடம் கேட்டால், என் அண்ணனிடம் தான் பிரச்சனை உள்ளது என்பார். இது எப்படி இருக்கிறது தெரியுமா? உடைபட்ட எலும்பு மறு கை எலும்பை பார்த்து, 'நான் நன்றாகத்தான் இருக்கிறேன். அந்த எலும்புதான் உடைந்து விட்டது என்று சொல்வதை போன்று உள்ளது. இந்த இரண்டு எலும்புகளும் என்ன செயய வேண்டும் தெரியுமா? வைத்தியரிடம் சென்று, சரியான சிகிச்சை செய்து கொண்டு, ஓய்வு எடுத்தால் சரியாகி விடும். குணமான உடன் பழைய நிலைக்கு வந்து விட முடியும் என்று விசுவாசித்து, வைத்தியரிடம் சென்று சரி செய்ய வேண்டும்.  இதை போன்றதுதான் சகோதரனோடுள்ள உறவு முறிவும். ஆனால் இதை சரிசெய்ய வேண்டுமென்று மற்றவர்  விரும்புவாரா? நிச்சயமாக இல்லை.
பிரியமானவர்களே, நமது சரீரத்தில் ஒரு முறிவு என்றால் நம்மால் நிம்மதியாக இருக்க முடியாதல்லவா? ஆனால் நமது அண்டை வீட்டாரோடு, சகோதர சகோதரிகளோடு, சக விசுவாசிகளோடு, உறவினரோடு, கணவரோடு, மனைவியோடு உடைவு ஏற்பட்டிருந்தால் அதை குறித்து கவலையற்றிருக்கிறோமே அது எப்படி?
ஆகவே நமது உறவில் யாரோடு முறிவு ஏற்பட்டுள்ளது என்று பார்த்து, விரைவில் ஒன்றுபட முயற்சிப்போம். உடைந்த உறவுகள் சீக்கிரமாய் இணைந்து விடுங்கள் ம்..................
நாம் வாழும் நாட்கள் மிக கொஞ்சமே, நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாத நிலையில், யார் மேலும் வஞ்சம் வைத்து கொண்டிருக்காதபடி, உறவுகளை சீர்ப்படுத்துவோம். மன்னித்து மறக்க முயற்சிப்போம். சகோதர உறவுகளில், சக விசுவாசிகளோடுள்ள உறவுகளில், மற்ற எந்த உறவிலும், (தவறான உறவுகள் அல்ல) முறிவு வராதபடி காத்து கொள்வோம்.
இருதயத்திலுள்ள கசப்புகளை அகற்றுவோம். நாம் சில வேளைகளில் குணமடையாமல், வியாதியாக இருப்பதற்கு காரணம், நம் இருதயத்திலுள்ள கசப்புகளாகவும் இருக்கலாம். ஆகவே எந்த கசப்பும் வைக்காதபடி, இருதயத்தை சுத்தமாக்குவோம். மகிழ்வுடன் வாழ்வோம் .................................

Wednesday, 11 January 2012


 மனிதனை பற்றி சில தகவல்கள்

        ஒரு நாள்லில்
  • ஒரு மனிதன் உடலில் 103689 முறை இதயம் துடிக்கின்றது.  
  • 168 மில்லியன் மைல்கள் இரத்தம் பயணம் செய்கிறது.  
  • 23000 முறை அவன் சுவாசிக்கிறான்.                                                                            வாழ் நாள்லில்  
  • மேலும் ஒரு மனிதன் வாழ்நாளில் 35000 கிலோ உணவு உண்ணுகின்றான்.  அதாவது, எடையில் 7 இந்திய யானைகளை உண்ணுகின்றான்.

Wednesday, 16 November 2011

பாராட்ட மறவாதீர்கள்


ஒரு வயதான முதியவர் மரண படுக்கையில் இருந்து, நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தார். ஒரு நாள் அவருக்கு தன் வீட்டின் கீழே இருந்து அவருக்கு பிடித்தமான ரவா கேசரி செய்யும் வாசனை வந்தது. அதை எப்படியாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. மிகவும் கஷ்டப்பட்டு, எழுந்து கீழே விழுந்து, சிரமப்பட்டு கீழே சென்றார்.
உயிரை கையில் பிடித்தபடி கீழே சமையறைக்குள் சென்றபோது, அவரால் நம்ப முடியவில்லை. அவருக்கு பிடித்தமான உணவு வகைகளும், கேசரியும் செய்து வைக்கப்பட்டிருந்தது. அவர் நினைத்தார், 'கடைசியாக என் கணவர் நல்ல சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மரித்து போகட்டும்' என்று தன் மனைவி ஆசையாய் சமைத்திருப்பதாக நினைத்து சேகரியை பக்கத்தில் இருந்த ஒரு கரண்டியில் எடுத்து, அதை வாயில் வைக்கும் தருவாயில், அவருடைய மனைவி கையில் ஒரு அடி கொடுத்து,
' இந்தபக்கம் வராதீர்கள், இது உங்கள் அடக்கத்திற்கு வருபவர்களுக்காக செய்தது' என்று முதியவரை துரத்தி விட்டார்கள்.
அந்த பாட்டியம்மா மாத்திரம் அல்ல, நாமும் கூட அநேக வேளைகளில் அப்படித்தான் இருக்கிறோம். உயிரோடு இருக்கும் நேரத்தில் நாம் அவர்களிடம் நீர் எத்தனை அருமையானவர் என்று சொல்வதில்லை. ஆனால் மரித்தப்பின் எத்தனை எத்தனை வார்த்தைகள் அவரை புகழ்நது பேசுகிறோம். அவர் உயிரோடு இருக்கும்போது அந்த வார்த்தைகளை சொன்னால் அவர் எப்படி மகிழ்வார்!
மலர்களை ஒரு மனிதர் மரித்தப்பின் சார்த்துகிறோம். அவர்கள் உயிரோடு இருக்கும்போதே கொடுத்தால் அவர் அதன் அழகை இரசிப்பாரே!
நம்முடைய நாட்டில் மரித்தப்பின் அநேகருக்கு பெரிய பெரிய விருதுகளை கொடுப்பார்கள். அவர் ஒருவேளை மிகவும் வயதாகிதான் மரித்திருப்பார். அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுத்திருந்தால், அந்த வயதான காலத்தில் மகிழ்ச்சியோடே இருந்திருப்பாரே!
ஒருவேளை உங்களுக்கு யாராவது விசேஷித்தவர்களாக இருந்தால், அவர் மரிக்கும்வரை காத்திராதேயுங்கள். அவர் உயிரோடு இருக்கும்போதே அவரை வாழ்த்தி, உள்ளதை உள்ளபடி சொல்லி, அவரை மகிழ செய்யுங்கள்.
ஒருவர் செய்கிற நன்மையான காரியங்களை பாராட்ட மறவாதீர்கள். நீங்கள் பாராட்டுவதால் அவர் தலைகீழாக நிற்க போவதில்லை

Tuesday, 15 November 2011

கொஞ்சம் படிபா ..............

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.
ஆனா,
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்� �ு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!


என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

டிசம்பர் 31க்கும்,
ஜனவரி 1க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம்.
ஆனால்,
ஜனவரி 1க்கும்,
டிசம்பர் 31க்கும்,
ஒரு வருசம் வித்தியாசம்.
இதுதான் உலகம்.


பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??
யோசிக்கனும்...!!


தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!

(என்ன கொடுமை சார் இது!?!)

தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!

(ஹலோ! ஹலோ!!!!)

தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,
கழித்தல் கணக்கு போடும்போது,
கடன் வாங்கித்தான் ஆகனும்.
கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா?
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.

இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

உங்கள் உடம்பில்
கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம். சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்

மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?
"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும.




தீவிரமாக யோசிக்காதோர் சங்கம் (எங்களுக்கும் வேறு எங்கும் கிளைகள் கிடையாது) -


1. மண்ணிலிருந்து மண்னெண்ணெய் எடுக்கலாம்; 
கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா? 


2. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டா போலீஸ் வரும்; 
ரயில்வே ஸ்டேஷனுக்கு போன் போட்டா ரயில் வருமா? 


3. தண்ணியில கப்பல் போனா ஜாலி; 
கப்பல்ல தண்ணி போனா காலி! 


4. ஹோட்டலில் காசு கொடுக்கலேனா மாவாட்டச் சொல்லுவாங்க.... 
ஆனால் பஸ்ல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்டச் சொல்லுவாங்களா? 


5. யானை மேல நாம உட்கார்ந்தா சவாரி! 
நம்ம மேல யானை உட்கார்ந்தா ஒப்பாரி! 


6. பஸ் போயிடாலும் பஸ்ஸ்டாண்டு அங்கயேதான் இருக்கும். ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள்ஸ்டாண்டு கூடவே போயிவிடும். 


7. பாய்சன்(Poison) பத்துநாள் ஆனாலும் பாயாசம் ஆகாது.
ஆனால் பாயாசம் பத்துநாள் ஆனா பாய்சன்(Poison) ஆயிடும்.


8. தம் அடிச்சா புகை வரும். ஆனா புகையை அடிச்சா தம் வருமா? 


9. தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்பு அடிச்சா தண்ணி வருமா? 


10.எவ்வளவு பெரிய பல்டாக்டரா இருந்தாலும் கடிக்கிற செருப்போட பல்லைப் பிடுங்க முடியுமா? 


11. டீஸ்பூனால டீ கலக்கலாம். டேபிள் ஸ்பூனால டேபிளைக் கலக்க முடியுமா? 


12. மெழுகை வைத்து மெழுகுவத்தி செய்யலாம். ஆனா கொசுவை வைத்து கொசுவத்தி செய்ய முடியாது. 
                                                                                                      by 
                                                                                            shseminary.blogspot.com

மரணமே வந்தாலும்

மரணமே வந்தாலும் மறக்காத  இதயம் வேண்டும்,
             மறு  ஜென்மம் ஓன்று இருந்தால் நீயே வேண்டும் ,
                          உறவாக அல்ல உயிரக
                                                                                       by
                                                                                                    s.b.p
 

Monday, 14 November 2011

About American sense

America is one of the world leader. The country must be a role model to all country . But that country haven't sense. Every one can see that country activities . Our country frequently and continuously affect by America . They do mistake and ask sorry . What is this ? World leader do made mistake ? But that country made mistake. Now our former president of India Dr.Abdul kalam affect by their securities in that country's new york airport . That idiot fellows check our dear one(kalam) like this. He face double security checkup. First one in airport then another one he was sitting another air India flight that time u.s securities came and ask his jacket and shoes claiming that these items were not checked according to prescribed procedure during the private screening . This respect give to us . So America is metal and non-sense country. The America insult our country frequently.The Indian government should take more action and the American president Mr.Obama should ask sorry for this incidence . They must accept American people have no sense

Wednesday, 21 September 2011